பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 57

  • பிற உயிர்களுக்கு வருகிற குற்றங்களாவன, நடத்தல், இருத் தல், கிடத்தல், நிற்றல், உண்டல் முதலான தொழில்களைச் செய்கிற விடங்களிலே சீவன்களுக்கு உண்டாகும் வாதைகளாம்

என்றவாறு. அவற்றை முந்தி அறிந்து வாராமற் காக்கிறது அறிவினால் ஆம் பயனாம் என்பதாம். குறிப்பு மேல் பிறஉயிர்களுக்கு” என்பது முதல் உள்ளவை, பின்வருமாறு காகிதச் சுவடியில் திருத்தப்பட்டுள்ளன: பிற உயிர்களுக்கு வருகிற குற்றமாவது; தான் நடக்கிறது இருக்கிறது நிற்கிறது உண்கிறது முதலான தொழில்களைச் செய்கிற விடங்களிலே சீவன்களுக்கு வரப்போகிறவாதைகளை முந்தியறிந்து வாராமற் காக்கிறது. டு J 1 f. இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் என்பது பொல்லாத காரியம் என்று அறிந்தவற்றைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் என்றவாறு. தருமமும் பாவமும் மனசு முன்னாக இருந்து அறிய வேணும்; ஆன படியினாலே தான் குற்றம் என்று அறிந்தது பிறருக்கும் குற்றம் என்று அறிய வேண்டும் என்பதாம். அள் J I 7. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா மானாசெய் யாமை தலை என்பது மனசுக்குச் சரி போகாமல் பொல்லாததா யிருக்கிற செயல் களை எக்காலத்தும் யாவருக்கும் சிறிதும் செய்யாமல் இருக்கிறதே முந்தின தருமம் என்றவாறு: மனத்திலே பொல்லாங்கை நினையாமலிருந்தால் பாவம் இல்லை என்பதாம். GIT