பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 6 1 327. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை என்பது தன்பிராணன் போனாலும் தான் பிறிதொரு சீவனைக் கொல்லாமல் இருக்கவேணும் என்றவாறு. தன்னை ஒரு சீவன் கொன்றாலும் தான் அந்தச் சீவனைக் கொல்லாமல் இருக்க வேணும் என்னுமாம். தன் சீவன் போகிறது நிற்கவேண்டு மென்று பிறிதொரு சீவனைக் கொல்ல லாகாது என்றுமாம். தேவதைகளுக்குப் பலியாகவும் சீவனைக் கொல்லப் போகாது என்பதாம். UT 328. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை என்பது தேவர்கள் பொருட்டாக யாகத்திலே சீவனைக் கொன்றால் வெகு செல்வம் வருமென்றாலும், அறிவுள்ளவர்களுக்குப் பாபம் வந்து கடையான பிறப்பிலே பிறப்பிக்கு மென்றவாறு. அறிவுள்ளவர்கள் சீவன்களைக் கொல்லார்க ளென்றவாறு. | نئے ஐ 29. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து என்பது கொலைத் தொழிலையுடைய மனுஷர்கள், குற்றங்களைத் தெரிந்தவர்களுக்குப், புலையர்களா மென்றவாறு. கொல்லுகிற தொழிலை யுடையவர்களே பறையரென்பதாம். சின் 330. உயிருடம்பி னிக்கியா ரென்பர் செயிருடம்பிற் செல்லாத்தி வாழ்க்கை யவர் என்பது ==T 1. 'ரென்ப' என்பது பிறர்பாடம்.