பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 63 332. கூத்தாட் .வைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று என்பது ஒருவனுக்கு ஐசுவரியம் வருகிற போது கூத்தாடுகின்ற இடத் திலே மனிதர் வந்து கூடுகிறாப்போல வந்து கூடும். அந்த ஐசு வரியம் போகிறபோது கூத்து முடிந்தவுடனே அந்த மனிதர்கள் எல்லாம் ஒரு கூடிணத்திலே போனாற் போலப் போம் என்ற வாறு. ஐசுவரியம் வருகிறபோது கொஞ்சங் கொஞ்சமாய் வந்து சேரும் போகிற போது நாலாவகையாலும் ஒரு கூடிணத்திலே போய்விடும் என்பதாம். =L 333. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுப்ெற்றா லற்குப வாங்கே செயல் என்பது நில்லாத இயல்பினையுடையது செல்வம்; அந்தச் செல்வத் தைப் பெற்றபோதே அதனால் செய்யப்பட்ட தருமங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்றவாறு. செல்வம் நில்லாது என்று அறிந்து தருமங்களைச் சீக்கிர மாகப் பண்ண வேண்டும் என்றவாறு. /H_ 334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரிரும் வாள துணர்வார்ப் பெறின் என்பது நாழிகை நாள் மாதம் வருஷமென்று சொல்லப்பட்டது, ஆதித்தனுடைய பிரமாணத்தினாலே; அந்த நாள் என்கிறதைக் காட்டி உலகத்திலேயுள்ள சீவன்களுடைய சரீரங்களை வாளாலே அறுத்துக் கொண்டுபோகிறானென்று எண்ணிக் கொள்வார்கள், அறிவுள்ளோர்கள் என்றவாறு,