பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 64 திருக்குறள் அறிவில்லாதார், நமக்குப் பொழுது போகிறது என்று சந்தோஷப்படுவார்கள் தங்கள் ஆயுசு மாண்டுபோகிறதை அறியார்கள் என்பதாம். அ 335. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை மேற்சென்று செய்யப் படும் என்பது பேசவொட்டாமல் நாவை அடக்கி விக்கல் பிறக்கிறதற்கு முன்னே, மோட்சத்துக்குக் காரணமாகிய நல்ல தருமங்களை ச் செய்ய வேண்டும் என்றவாறு. டு 336. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை பிறங்கிற் றுலகு" என்பது ஒருவன் நேற்று இருந்தான், இன்று செத்துப் போனான் என்று சொல்லுகிற பெருமையையே யுடையது உலகம் என்ற வாறு . ஆதலின் இன்றிருந்தவன் நாளையிருப்பான் என்கிற நிச்சயம் இல்லையென்பதாம். அன் 337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல என்பது தம்முடம்பும் உயிருங் கூடி ஒருநாளாகிலும் இருக்கும் என்கிறதை நிச்சயமாக அறியார்: நினைக்கிறது கோடியு மல்லாமல் பின்னையும் அதிகமாக நினைப்பார்கள் என்றவாறு. நினைக்கிறதாவது, பொறிகளாலே அனுபவிக்கப்பட்ட இன்பநுகர்ச்சியும், அதற்குக் காரணமாகிய பொருள் கூட்டு மாறும், அதற்கு வந்த இடையூறுகளைப் பரிசுரிக்கு மாறும், அதனைக் காக்கு மாறும் என்பதாம். HT 1. யுடைத்திவ் வுலகு' என்ற பிறர் பாடம் இங்கும் காகிதச் சுவடியில் வரிபிளந்து எழுதப்பட்டுள்ளது.