பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 185 387. இன்சொலா லித்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு என்பது நல்ல வார்த்தைகளுடனே பொருளைக் கொடுத்து ரட்சிக்க வல்ல (ராசா)வுக்கு இந்த வுலகமவன் கீர்த்தியைத் தான் சுமந்து கொண்டு அந்த ராசா வேண்டிய வஸ்துக்களையெல்லாங் கொடுக்கு மென்றவாறு. ரட்சிக்கிறது, வலியாரெளியாரை நலிய வொட்டாமல் காக்கிறது. 888. முறை செய்து காப்பாத்து மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் ான்பது தான் நியாயந்தப்பாமல் நடத்திப் பிறர் நலிய வொட்டா மல் கார்க்கப்பட்ட ராசா மனுஷனே யானாலும் தெய்வ மென்று சொல்லப்படு மென்றவாறு. நியாயந் தப்பாதது. அறநூலும் நீதிநூலுஞ் சொன்ன படியே தப்பாமல் நடக்கிறது. பிறர் நலியாதது, வலவந்தர்' எளியவர்களை வாதை பண்ணாமல் காக்கிறது. كـ 389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கிட்டங்கு" முலகு என்பது தன்னை யதட்டிச் சொல்லப்பட்ட சினேகிதருடைய சொற் களைத் தன் செவி பொறாததாகச் சொன்னாலும் அதனுடைய பலனையறிந்து பொறுக்கப்பட்ட குணமுடைய ராசாவினது குடை நிழலின் கீழே யுலகந் தங்கியிருக்கு மென்ற வாறு. கவிகைக் கீழ்த்தங்குதலாவது, சகல ஜனங்களுமவனையே யாசரிப்பர்க' ளென்பது 'EFF 1. காப்பாற்று' என்று திருத்துக . காப்பாற்றுகிற 3. பலவந்தர் அ. வதை என்பது அச்சு நூல் க. கீட்டங்கு - கீழ்த்தங்கு (குறிப்புரை காண்க) 1. ஆசரிப்பார்கள் - கொண்டாடுவர்