பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 திருக்குறள் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்’ என்பது, எழுத்தறிந்தாற் குற்றந் தீரும்; குற்றந் தீர்ந்தால் வசனங்களைத் திருக்கறுப்பான்; வசனங்களைத் திருத்தமாகப் பேசுகிறவன் மெய்ப் பொருளையறிந்து பிறவித்துன்பங்களை யறுத்து மோட்சத்தை யடைவ னென்றவாறு. L 393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் என்பது கண்களை யுடைவர்களென்று சொல்லப்படுகிறது, கல்வியைக் கற்றவர்களையே. கல்லாதவர்கள் கண்களையுடையவர்களல்லர் புண்ணுடையவர்களென்று சொல்லப்படுமென்றவாறு. கல்வியினாலே பரப்பிரும சுரூபத்தையுங் காலங்களையு மறியப்பட்ட ஞானக் கண்னுடையவர்களே கண்னுடையவர் கள்; அறிவில்லாதவர்களே” புண்ணுடையவர்க ளென்பதாம். F. 394. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில் என்பது எல்லோரும் வந்து தன்னைச் சேருமாறு தயை பண்ணி அவர்கள் பிரிந்துபோறோமென்றால், இனியவர்களை யெங்கே காணப் போறோ மென்று நினைத்து விசாரப்படுகிறதே வித்து வான்கள் தொழிலென்றவாறு. புலவர் தொழிலாவது, தாம் நல்வழியொழுகல், பிறருக்குறுதி யான வார்த்தை சொல்லுதல் இவற்றால் கற்றாரிடத்திலே யெல்லாரு மன்புடையராவரென்பது அெ 1 யுடையவர்களல்லா - என்பது அச்சுநூல் அதிகமாகவுளது 2. அதில் லாதவர்களே என்பது அச்சுநூல் 3. போகிறோ