பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 22 s; னானால் நட்பாகவுஞ் செய்ய வேணு மென்பதாம். శ్రిP 475. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்பது மயிலிறகை யேற்றின வண்டியும் இருசு ஒடிஞ்சு போம், அந்த மயிலிறகையும் வண்டி பொறுக்குமட்டல்லாமல் அதிகமா யேற் றினா லென்றவாறு. எளியவர்களென்று பலரோடும் பகை பண்ணிக் கொண்டவன் அந்த எளியவர்கள் பலருங் கூடி வலியராய் அவர்களழிக்கக் கெடுவ னென்பதாம். டு 476. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் துக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும் என்பது ஒரு மரத்தினுடைய நுனிக்கொம்பிலே ஏறினவன் அது மட்டிலே நில்லாமல் தன்னுடைய நினைவினாலே பின்னையும் உயரவேற நினைச்சால் அந்த நினைவு அவனுயிருக்கிறுதியாகிப் பிராணகாணியைக் கொடுக்குமென்றவாறு. பகைவர் மேற் செல்வான் தன்னளவு சென்று நில்லாது மனது உற்சாகத்தினாலே பின்னையும் போவானாகில் அந்த நினைவு அந்தப் பகையை முடிக்க மாட்டாமல் தன் பிரான னைப் போக்கு மென்பதாம். ਾਂ 47.7. ஆற்றி னளவறிந் திக அதுபொருள் போற்றி வழங்கு நெறி என்பது பொருளைக் கொடுக்கிறவன் தனக்குள்ள பொருளி னள வறிந்து அதுக் கேற்கக் கொடுக்க: அப்படிக் கொடுக்கிறது பொருளை ரட்சிக்கிற வழியா மென்றவாறு. - 1rBaria காகிதச் சுவடியில் உள்ளது. 2. ஒடிந்து 3. நினைவினாலே - ஊக்கத்தினாலே 4. நினைத்தால்