பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 24 5 532. பொச்சாப்புக் கொல்லும் புகழை பறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு என்பது ஒருவன் புகழினை யவன் மறப்புக் கெடுக்கும்: அதெப்படிப் போலே யென்றால் அறிவைத் தரித் திரங் கெடுத்தாற்போலே யென்றவாறு. தரித்திரமறிவைக் கொல்லுதலாவது, இரப்பினாலே வருத் தப்பட்டுத் தன்வயிறு நிறைத்தல்; இது அறிவுடையவர்களுக் குண்டானால் அவர்களைக் கொஞ்சமாய்ப் பார்த்து இகழ்வார் கள்; அதனாலே அறிவு பிரகாச மாகா தென்பதாம். -- 533. பொச்சாப் பார்க் கில்லை புகழ்மை ய துவுலகத் தெப்பானு லோர்க்குந் துணிவு என்பது பொச்சாப்பாகிய மறப்புடையவர்களுக்குக் கீர்த்தியில்லை அந்தக் கீர்த்தி நூலுடையவர்களுக்கே யுண்டென்றவாறு: இது ராசாக்களுக்கே யல்லாமல் தர்ம தானங்களுடனே கூடின பேருக்கெல்லாஞ் சரி யென்பதாம். /һ 34. அச் மு டையார்க் கர ணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு என்பது காடும் மலையுங் கோட்டையு முதலாகிய அரணான விடத் திலே யிருந்தாலும். மனசிலே பயமுடையவர்களுக்கு அந்த அரண்களாலே பயனில்லை; அப்படிப்போலே எல்லாச் செல்வ முடையவரானாலும் மனசிலே மறப்புடையவர்களுக்கு அந்தச் செல்வத்தாற் பலனில்லை யென்றவாறு. பயமுடையவனின்ற வரண் அழியுமாறு போல, மறதி யுடையவன் செல்வங்களு மழியுமென்பதாம். = ఫ్రో 1. மகிழ்ச்சி 1. குறிப்புரை காண்க