பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 திருக்குறள் பின்னையும் நினைத்தலாகிறது. வேறொரு பொருளின் மேலே நினனவாய் முந்தி நினைத்த பொருளை மறவாமல் நினைக்கிறது. ஆக அதிகாரம் ச0 டுக்குக் குறள் டுல்ச0 இப்பால் 55. செங்கோன்மை என்பது, அரசனாலே செய்யப்பட்ட முறைமையினுடைய நன்மை அந்நன்மையும் செவ்வை தப்பா மல் நடக்கிற படியினாலே செங்கோ லென்பதாம். 541. ஒர்ந்து கண் னோடா திறை புரிந்தி யார்மாட்டுத் தேர்ந்து செய் வஃதே முறை என்பது தன் கீழே வாழ்வார் குற்றஞ் செய்தா லந்தக் குற்றத்தைப் பார்த்து, ஒருவரிடத்திலேயும் பகடிபாதம் வையாமல், எல்லா ரை யுஞ், சரியாகப் பார்த்து அந்தக் குற்றத்துக்குச் சொன்ன தெண் டனையைச் சாத்திரங் கற்றவர்களுடனே கூடவாராய்ந்து, குற் றத்துக்குத் தக்கதாகத் தெண்டிக்கிறதே முறைமை யென்ற வாறு. தனக்குச் சினேகிதர் பகைவரென்றெண்ணாமல் எல்லாரை யுஞ்சரியாய்த் தெண்டிக்கிறதே யரசனுக்கு நீதியாமென்பதாம். த 542. வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி என்பது உலகத்திலே யுண்டான சீவன்க ளெல்லாம் மழை யுண்டானா லுண்டா மென்றாலும், குடிகளெல்லாம் அரசன் செங்கோலுண் டானா லுண்டா மென்றவாறு. மழை சீவன்களை ரட்சிக்குறாப்போலே", அரசன் செங் கோல னானால் குடிகள் நன்றாயிருப்பார்க ளென்பதாம் -- 1. தங்களுடைய 2 மகிழ்ச்சி குறிப்புரை காண்க 4. முந்தி - முன்னர் 1. தன்மை என்பர் பரிமேலழகர்