பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருக்குறள் அவர்கள் அவர்கள் நடக்கிறதுஞ் சொல்லுகிறதும் அறியாமற் பகைவற் கெளியனாவன்; ஆனபடியினாலே யொற்று வேண்டு மென்பதாம். Fi 584. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று. என்பது தன் காரியஞ் செய்வார், சுற்றத்தார். பகைவரென்று சொல் லப்பட்ட அனைவரையுஞ் சொற் செயல்களா லாராய்வானே யொற்ற னாவா னென்றவாறு. தன் காரியஞ் செய்கிற பேர் செய்கிறத்தையும் சுற்றத் தார் தன்னிடத்தும் நாட்டிடத் துஞ் செய்கிறத்தையும் பகைவர் தன் அற்றம்’ ஆராய்தலும், பகைவராகச் செய்வனவும் அறிந்தா ராய்ந்து அவற்றிற் கேற்றன செய்ய வேண்டுதலின் இம்மூவகை யாரையும் பயப்படாமலாராய வேண்டு மென்பதாம். அF 585. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகா.அமை வல்லதே யொற்று என்பது ஒற்றப் பட்டார் கண்டால் சந்தேகப் டாத வடிவோடு பொருந்தி, அவர்களண்டையிலே யிருக்கச்சிலே அவர்கள் கடின மாகப் பார்க்கிற பார்வைக்குப் பயப்படாமல் மனத்திடமா யிருந்து, மறவாமற் கேட்டிருக்க வல்லவனே ஒற்றனாவா னென்றவாறு சந்தேகப்படாத வடிவாவன. பார்ப்பார் வணிகர் முதலாயிருக் கிற வடிவு டு 586. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று என்பது சகலத்தையுந் துறந்தவர்களாயும் விரதசீலாசாரங்களுள் ளவர்களாயும் உள்புகுதற்கரிதான விடங்க ளெல்லாம் உள் Humu 1. செய்கிறதையும் 2. சோர்வு 8. இருக்கச்சே - . இருக்குங்கால்