பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 9 5 ஒரு காரியஞ் செய்யுங்காலத்துத் தனக்குச் செல்வாக் குண்டானால், பலவந்தத்திலே செய்து மூடிக்கலாம்: செல்வாக்கில்லாமல் சமானமானபோதும், எளியனான போதும், சாமமான நல்லவார்த்தையினாலேயும், தானமாகிய இரப்பு வார்த்தையினாலேயும் செய்து முடிக்க வேணுமென்றவாறு கூ 674. வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்கால் தியெச்சம் போலத் தெறும் என்பது செய்யத்தக்க காரியமும் செயிக்க வேண்டின பகையுமென்று சொல்லப்பட்ட யிரண்டும் நிறைவேறச் செய்து முடியாமற் குறைவைத்தால் நெருப்புப் பற்றின விடத்திலே அவித்துச் சேஷம் வைத்தாற்’ போல் பின்பு அதிகமாய் வளர்ந்து கெடுக்கு மென்றவாறு. ஆனபடியினாலே செய்ய வேண்டின காரியங்களை நிறை வேறச் செய்யவேணு மென்பதாம். F 675. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருடீர வெண்ணிச் செயல் என்பது ஒரு காரியத்தைச் செய்யுமிடத்துப் பொருளையும் ஆயுதங் களையும் காலத்தையும் காரியத்தையும் இடத்தையும் நன்றாக வாராய்ந்து செய்யவேணு மென்றவாறு. பொருளென்றது சிலவும் ஆதாயமும்; கருவியென்றது தன் சேனையும் மாற்றான் சேனையும்; காலமென்றது தமக்காங் காலமும் பிறருக்காங் காலமும்; காரியமென்றது தாம் வல்ல வினையும்'; இடமென்றது தாம் வெல்லுமிடமும் பிறர் வெல்லு மிடமும்; இவ்வைந்தையும் தாம் வெல்லுகிறத்தைத் தப்பாம லெண்ணிச் செய்யவேணு மென்பதாம். டு 1. சமமான 2. வைற்றாற் என்பன காகிதச் சுவடி அ. செலவும் 4. பிறர்வவ்லவினையும் என்பதை இங்குச் சேர்க்க 5 . வெல் துகிறதைத்