பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 297 679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை யொட்டிக் கொளல் என்பது காரியஞ் செய்கிறவன் தன் சினேகிதருக்கு நல்லது செய் கிறத்திலும் தன் பகைவரைத் தனக்குறவாகச் செய்து கொண்டு காரியஞ் செய்கிறது நல்ல தென்றவாறு. சினேகிதருக்கு நன்மை செய்து பகைவரை வெல்லுகிறத்தி லும் பகைவரைச் சாம பேதங்களினாலே யுறவாக்கிக் கொள்ளு கிறது மிகவும் நன்றென்றவாறு. சின் 680 உறைசிறிய ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து என்பது கொஞ்சமான ராச்சியத்திலே யிருக்கிற மந்திரிகள், தங்களி லு ம் பலவந்தர் வந்து எதிர்த்தால் தங்கள் சேனை நடுங்கிறத் துக்குப் பயப்பட்டு, எதிராளியை வணங்கிச் சமாதானம் பண் னிக் கொள்வர் என்றவாறு. எளியாரொடு சந்திக்கு" வலியாரியை தலரி தாகலின் "பெறின்' என்றார். எளியராயினார் எதிராளியை வணங்கிச் சமா தானம் பண்ணிக் கொள்ள வேணு மென்பதாம். υ ஆக அதிகா, ம் சுல்.அ க்குக் குறள் சுள.டி) இப்பால் 69 துாது என்பது, எதிராளி யிடத்திலே போய்த் தான் தெரிந்து சொல்லி வருகிறதும், சொன்னது சொல்லி வருகிறதும் அதிலே தான் சொல்லி வருகிறவன் மந்திரியோடொப்பன்; சொன்னது சொல்லி வருகிறவன் மந்திரியினுங் கால்வாசி குணங் குறைந்த வனா மென்றவாறு. 1. செய்கிறதிலும் 2. வெல்லுகிறதிலும் 3. எதுற்றால்’ என்பது காகிதச் சுவடி. 4. நடுங்குகிறதற்கு .ே சமாதானத்துக்கு