பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 2 3 அரசனுக்கு வேண்டிய காவல் காடு மலை நீர்நிழல் முதலானவைகளெல்லாம் உண்டாயிருந்தாலும், சண்டை பண்ணுகிறதிலே கெட்டி இல்லாதவர்களிடத்திலே அரணில்லை ான்றவாறு. சண்டையிலே கெட்டியாவது, சலியாமலிருக்கிறதும் அள வறிந்து செய்கிறதும் உலகத்திற்கேற்க நடக்கிறது.மாம், üᏍ H ஆக அதிகாரம் எ லடுக்குக் குறள் எளடு) இப்பால் 76. பொருள் செயல்வகை என்பது, மெத்தவும் நாட்டினாலேயும் அரணாலேயும் ஆக்கவும் காக்கவும் படுவதாய்ப் பொருளைத் தேடுகிறது. 751, பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் என்பது ஒரு பிரயோசனமாக எண்ணப்படாதவர்களைப் பிரயோசன மானவர்களாகச் செய்ய வல்ல பொருளே ஒருவனுக்குப் பொரு ளாகிறது; பின்னை வேறு பொருளில்லை யென்றவாறு. பிரயோசனமாக எண்ணப்படாதவர்கள், அறிவில்லாதாரும் இழி கலத்தாருமாம். இவர்களை யறிவுடையாரும் உயர்ந்த குலத்தாரு மாக ஆக்குதலே பொருளாவ தென்பதாம். தி 752. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு என்பது எல்லாக் குணங்களுடைய ராயினும் பொருளில்லாரை எல்லாரு மிகழ்வர்; எல்லாப் பொல்லாங்கு மு. டடயராயினும் பொருளுடையாரை எல்லாரும் புகழ்வ ரென்றவாறு. 2– 1. வற்கவும் காக்கவும் என்பது காசித சுவடியிலுள்ளது