பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24 திருக்குறள் 753. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று என்பது பொருளென்று எல்லாராலுஞ் சிறப்பாய்ச் சொல்லப்பட்ட அவியாத விளக்குத் தன்னைச் சத்தியத்துடனே தேடினவர்களுக்கு அவர்கள் நினைத்த தேசத்திலே போய்ப்பகை யென்னு மிருளைக் கெடுக்கு மென்றவாறு. |Fi 754 அறனினு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்பது செய்கிற காரியத்தைப் பொல்லாங்கில்லாமல் நல்ல வழி யிலே செய்து தேடின பொருள், அவனுக்குத் தர்மத்தினையுஞ் சுகமாகிய இன்பத்தினையுங் கொடுக்கு மென்றவாறு. ஞாய'மார்க்கமாக வந்த பொருளினாலே தானமும் பூசையும் பண்ணினால், நெடுங் காலம் செல்வங் குறை படாமல் நின்று இன்பம் பயக்கு மென்பது. அச் 755. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் என்பது தான் கொடுக்கிறவனிடத்திலே தயையும், கொடுக்கிறவன் தன்னிடத்திலே யன்புடனே கொடாத பொருளைக்கைக் கொள் ளாமல் விட்டுவிடவேணுமென்றவாறு.* அருளொடு மன்போடு மாவது", ஞாய மார்க்கமாக வரு கிற பொருள்: அநியாயமாகப் வருகிற பொருள் பச்சைப்பானை' 1. இது அச்சு நூலிலில்லை 2. நியாய 3. குறிப்புரை ண்காக 4 ஆவது - வரும் பொருளாவது - அச்சுநூல் 5. பச்சைப்பானை-பசுமட்கலம்