பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 திருக்குறள் பேதையானவனுடைய சினேகம் மெத்த நல்லது; அதெப்படி யென்றால் சிறிது நாளிலே அவனை விட்டுப்பிரிந்தால் அதனாலே குற்றம்வராது; ஆனபடியினாலே நல்ல தென்ற வ Tது. அறிவுடையவன் சினேகம் பிரிந்தால் வெகுதுக்கம் வரும். 840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்பது பெரியவர்கள் சபையிலே பேதையானவன் போனால், கழுவாத காலைச் சுகத்தைக் கொடுக்கிற படுக்கைக் கட்டிலின் மேலே வைத் ததோ டொக்கு மென்றவாறு. கழுவாத காலால் மிதித்த’ அமளி பழிக்கப்படுமாறு போலப் பேதையான் புகுந்த சபையும் பழிக்கப்படும் என்பதாம். ல் ஆக அதிகாரம் சக்குக்குறள் அளசல் இப்பால் 85. புல்லறிவாண்மை என்பது தான் சிற்றறிவினனா யிருந்தே தன்னைப் பேரறிவுடை யனாக எண்ணிக் கொண்டு பெரியோர் சொன்ன வுறுதி வசனங் களைக் கைக் கொள்ளாமை யென்பது. 841. அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை பின்மையா வையா துலகு என்பது ஒருவனுக்கு இல்லாமையாகிய தரித்திரத்துக் குள்ளே மெத்தத் தரித்திரமாவது அறிவில்லாமையே; பொருளில்லாமை யை அதுபோல் வறுமையாக எண்ணாருலகத்தா ரென்றவாறு. அறிவாவது, நல்லறிவு. அறிவில்லாதவர்கள் செல்வமுண்டா யிருந்தும் இம்மை மறுமைப்பயன் எய்தார் என்பதாம். ரி1 1. சில அச்சு நூல் 2. மெரித்த என்பது காகிதச்சுவடி