பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்ருறள் 8.67. கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை என்பது ஒரு காரியத்தைச் செய்ய உத்தேசிச்சு' இருந்து அதற்கேலா ததை’ச் செய்கிறவன் பகையைச் சில பொருளைக் கொடுத்தா கிலுங் கொள்ள வேணு மென்றவாறு. ஏலாத காரிய மாவது, எளியவனான போது வலுமை 1ண்ணுகிறதும், வலுமையுடையவனான போது பயப்பட்டு அடங்கியிருக்கிறது.மாம். ώσΓ 868. குணமிலனாய்க் குற்றம் பல வாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து என்பது ஒருவன் குணமொன்று மில்லாதவனாய்க் குற்றம் வெகுவ யுடையவனாயின் அவன் பகைவர்க்குத் துணையாவா னென்ற வாறு. குணமாவது, ராசநீதி; படையரண் முதலியன. குற்ற மாவது, ஆவதும் ஆகாததும் அறியாமற் செய்கிறதா." التي 869. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் என்பது அறிவில்லாதவனுமாய்ப் பயப்படுகிறவனுமாய் இருக்கிற பகை வரை உடையவர்களுக்கு எந்நாளும் நீங்காத வின்ப முண் டா மென்றவாறு. அறிவில்லாதவனும் பயப்படுகிறவனுமாயிருக்கிறவனை எளி தாய் வெல்லலாம்; ஆனபடியினாலே எல்லா வின்டங்களும் ஒருக்காலே வந்தடையும்; அதனாலே மறுமைக்குஞ் சுக முண்டாமென்பதாம். பின் 1 உத்தேசித்து 2. கோரத்தை; 3. யேராத என்பன காகிதச் சுவடி .. குற்றம்- அன்பின்மை முதலியன-அச்சுநூல் 5. ஒருகாலே