பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 || 1 எல்லாருக்கு மெளியனாய் நன்மை யுடையனா யிருந்தால் பண் புடைமை யென்கிற குணம் தானே வந்து சேரு மென்றவாறு க 9.92. அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு எனபது பிறரிடத் கிலே அன்புடைய னாயிருக்கிறதும், நல்ல குடியிலே பிறந்து உலகத்துக் கேற்க நடக்கிறதும் ஆகிய இந்த இரண்டு குணமும் ஒருவனுக்குண்டானால் அவனைப் பண்புடையவ னென்று சொல்லுவார்க ளென்றவாறு. அ 993. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு என்பது பெறுதற்கரிய மனுஷ சரீரத்தை யெடுத்தாலும் நல்ல குண மில்லா விட்டால் பெரியவர்களுடனே சரியல்ல, நல்ல குண மு நல்ல செயல்களு முண்டாயிருக்கிறதே நல்லவர்களுடனே சரி யென்றவாறு. մի 994, நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு என்பது நீதியையும் தர்மத்தையும் விரும்பி யிருக்கிற படியினாலே பிற ருக்கும் தமக்கும் பலனாகிறவர்களுடைய நன்மையை உலகத் தார் கொண்டாடு வார்க ளென்றவாறு. P 995. நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு என்பது ஒருவனை விளையாட்டுக்கு இகழ்ந்து பேசுகிறதும் பொல்லா தாயிருக் கம்: ஆனபடியினாலே பிறருடைய குணங்களை யறிந்து நடக்கிறவர்களிடத்திலே பகை யுண்டானாலும் அது பகை யாகாது; நல்ல குணமே யுண்டா மென்ற வாறு.