பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 12 திருக்குறள் பிறர் குணங்களை யறிந்தவர்கள் பொல்லாங்கு செய்யா மல் நன்மையையே செய்வார்கள்; அதனாலே பகையுமுற வாயிருக்கு மென்பதாம். டு 99.6. பண்புடையார்ப் பட்டுண் டுலக மது வின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது பண்புடையவர்களான நல்ல குணமுடையவர்க ளுண்டாகிறபடி யினலே உலகவியற்கை எந்நாளு முண்டாய் வருகிறது: பண்புடையவர்க ளில்லாவிட்டால் உலகவியற்கை மண்ணிலே புகுந்து கெட்டுப்போ மென்றவாறு. அா 997. அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் என்பது மனஷருக்குரியதான பண்பு இல்லாதவர் அரத்தின் கூர்மை போலும் கூர்மையான புத்தியுடைய ராயிருந்தாலும், ஒரறிவாகிய மரத்துக்குச் சரி யென்றவாறு. அரமானது தன்னுடனே சேர்ந்தவற்றைப் பொடி யாக்குறாப் போலே,கூர்மை யான புத்தியிருந்தாலும் தயையில்லாத போ தங்களைச் சேர்ந்தவர்களைக் கெடுப்பரென்பதாம். CT 998. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை என்பது தன்னுடனே சினேகம் பண்ணாமல் பொல்லாங்கு செய்கிற வர்களுக்கும் தான் நல்லவனாய் நன்மையைச் செய்யாவிட்டால், அறிவுடையவர்களுக்குக் குற்றமா மென்றவாறு, எல்லாருக்கும் நன்மையைச் செய்யவே அறிவுடையவனா மென்பதாம், لئے | 1. யாக்குவது