பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450

திருக்குறள்

னாப் போலே[1] பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ந்து சிரிப்பாள் என்றவாறு.

மகிழ்கிறது இவளைப் புணர வேண்டு மென்பதாம்.[2]

1096. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்

ஒல்லை யுணரப் படும்

என்பது

தோழி சொல்லுகுற[3] வசனத்தை யறிந்த தலைமகள்[4] தன்னுள்ளே சொல்லியது.

புறத்தியிலே பிறத்தியார் போலக் கடின வசனங்களைச் சொன்னோம்[5]; உள்ளே பகையில்லாதவர் வசனத்தைக் குறையுடையவர்களாலே கொப்பென அறியப்படு மென்றவாறு:

கடுஞ்சொல்லாவது, இவ்விடம் காவல் மிகுதியுடையது[6]. புணர்ச்சிக்கு இடமல்ல, வரவேண்டா மென்பதாம்.

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும்

உறாஅர் போன் றுற்றார் குறிப்பு

என்பது (இதுவுமது)

பிறகு சினேகம் பண்ண வேணு மென்று மனதிலே நினைத்து முந்திக் கடின வார்த்தைகளைச் சொன்னதும், கோபமான பார்வையும், பிறத்தியார் போலே யிருந்து *உறவாகிறத்துக்குக்[7] குறிப்பென்றவாறு*.

முன்னே கடின வசனஞ் சொன்னாரென்று பயப்பட வேண்டா மென்பதாம்.

1098. (அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்

பசையினள் பைய நகும்


  1. சிமிட்டினாற் போலே (சுருங்கினாள் போல) என்க
  2. இனி இவளைப் பெறுதல் நிச்சயம் என்பது குறிப்பெச்சம் அச்சுநூல் (பரிமேலழகருரை)
  3. சொல்கிற
  4. தலைமகன் என்பர் பரிமேலழகர்
  5. சொன்னாலும்
  6. அச்சுநூலிற் கண்டது
  7. உறவாகிறதற்குக் *முதல் *வரை: நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவன-அச்சு நூல்