பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

455

பாத்துண்ணும் இல்லறத் தோடு பொருந்த வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது:

அழகிய மாமை நிறத்தையுடைய இந்த ஸ்திரீயினுடைய புணர்ச்சியின்பம், தன்னுடைய ஊரிலேயிருந்து தான்செய்கிற தொழிலினாலே வந்தபொருளைப் பிதிரர் தெய்வம் விருந்து சுற்றத்தார், இவர்களுக்குக் கொடுத்துத் தன்பங்கைத் தான் சாப்பிட்டதோடொக்கும் என்றவாறு.

இல்லறம் செய்கிறவர்கள் பெறுகிறபலனை எனக்கு இவள் புணர்ச்சியே தரும் என்று மணந்து கொள்ள உடன்படாதவன் சொன்னதாம்

1108. வீழும் இருவர்க் கினிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு

என்பது ஒத்த அன்புடைய உங்களுக்கு ஒருபொழுதும் விடாதபுணர்ச்சியே இனியதென்று சொன்ன தோழிக்குச் சொல்லியது.

நீ சொல்லுகின்ற தொக்கும்; ஒரு பொழுதும் நெகிழாமையிற் காற்றினாலேயும் பிரிக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் ஆசைப்படுகிற இருவருக்கும் இனிதே என்றவாறு.

களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து, மணந்து கொள்ளச் சம்மதியாதவன் கூறியவாறு.

1109. ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்

கூடியார் பெற்ற பயன்

என்பது கரத்தல்[1] வேண்டாமையின் இடையற[2] வில்லாத கூட்டமே இன்பப் பயனுடைத் தென்ற தோழிக்குச் சொல்லியது:

புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டிய பிணக்கும், அந்தப் பிணக்கு மட்டறிந்து தீருகிறதும், அதன்பிறகு புணருகிறதும் என இவையே காமத்தை விடாதே எய்தியவர்கள் பெற்ற பலனென்றவாறு.


  1. மறைத்தல்
  2. தடை