பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

திருக்குறள்

குணங்களாவன: நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு.

சொல்லப் போகிறது தலைமகள் வசனம்[1]

1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்

நுண்ணியரெங் காத லவர்

என்பது, ஒரு வழித் தணப்பின் கண் தலைமகனைத் தோழி இயற்பழிப்பள்[2] என்றஞ்சி அவள் கேட்கத் தன்னுள்ளே சொல்லியது:

என் காதலர் யான் காணாமாற் பொருள் தேடப் போயினாரென்று நினைத்தாலும், என் கண்களை விட்டுப் போகார்; யான் அறியாமற் கண்ணை மூடினால் வருத்தப்படுகிறது மில்லை; ஆன படியினாலே என்னுடைய காதலர் மெத்த சூட்சும மானவர் என்றவாறு.

இடைவிடாமல் நினைக்கிறதினால் எப்பொழுதும் முன்னே தோன்றுகிற படியினாலே, கண்ணுள்ளே இருக்கிறார் என்றும், மூடினால் போகாரென்றும் கூறினாள்.

1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

மெழுதேங் கரப்பாக் கறிந்து

என்பது, இதுவுமது

காதலர் எப்பொழுதும் என்னுடைய கண்ணிலே இருக்கிற படியினாலே, கண்ணிலே மையிடுகிறது மில்லை; அது ஏன் என்றால் மையிடுகிற நேரமும் அவர் மறைவர் என்றெண்ணி என்றவாறு.

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து

என்பது, இதுவுமது


  1. கூற்று
  2. இயற் பழித்தலாவது-தலைமகனது தன்மையைப் பழித்துப் பேசுதல்