பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



464

திருக்குறள்

ரென்று பழிக்க வேண்டாம் என்பதாம்.

ஆக அதிகாரம் ளக௩ க்குக் குறள் சதள௩௰ குறிஞ்சி முற்றும்

இப்பால் 114. நாணுத்துறவுரைத்தல் (பாலை)

என்பது, பிரிந்து போன தலைமகன் தோழிக்குத் தன்னுடைய நாணம் துறக்கிறதைச் சொல்லுகிறதும், அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் தன்நாணம் விடுகிறதைச் சொல்லுகிறதுமாம்.

1131. காம முழந்து வருந்தினார்க் கேமம்

மடலில்ல தில்லை வலி

என்பது, பிரிந்தவன் சொல்லியது:

தனக்கு அரியராய ஸ்திரீகளோடு காமத்தை அனுபவித்து பிறகு அந்தக் காமம் பெறாமல் துக்கப்படுகிற புருஷர்களுக்கு மடலூர்கிறதல்லாமல் பின்னையொன்றும் பலம்[1] இல்லை என்றவாறு.

மடலூர்கிறதாவது, தலைவன் அந்த ஸ்திரீயைப் போலே படத்திலே எழுதிக்கொண்டு அதைப் பார்த்துக் காம வருத்தம் தீருகிறதாம். ௧

1132. நோனா வுடம்பு முயிரு மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

என்பது, நாணமுடைய உமக்கு மடலூர்கிறது முடியாதென்று விலக்குகிறவளுக்குச் சொல்லியது:

காம வருத்தத்தினைப் பொறாத உடம்புமுயிரும் மடலுாற நினையாநின்றன, அதனை விலக்கும் நாணத்தைக் கெடுத்து என்றவாறு.


  1. வலிமை