பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

475

நாயகன் பிரிவு சொல்லிய போது அதற்குச் சம்மதித்து, அவன் பிரிந்து போகிற போது வருகிற துக்கத்தையும் நீக்கிப் பிரிந்துபோன பிறகு வந்த துக்கத்தையும் பொறுத்துப் பின்னையும் இருந்து உயிர் வாழ்கிற, ஸ்திரீகள், உலகத்திலே பலர் என்றவாறு.

பண்டு புருஷனுடனே கூடி இன்பமாயிருக்கிறவர்கள் அந்த இன்பமும் இழந்து துன்புற உடன்படுதல் அரிது; நாயகன்போன பரஸ்தலங்களிலே அவனுக்கு என்ன உபத்திரவம் வருமோ என்றும், அவர் வருகிற பரியந்தம் நான் எப்படித் தனியே யிருப்பேன் என்றும், அவர் எப்போது வருவார் என்றும் இப்படிப் பட்ட துக்கங்கள் பலவுமுண்டு; இவற்றைப் பொறுத்துப் பிராணனுடனே இருக்கிறது அரிதாம். பிரிந்து போன பிறகு அவர் வருகிற பரியந்தம் மனதுக்குள்ளே இருக்கிற காம விகார வேதனையையும். புறத்திலே சந்திரன் குயில் தென்றல் யாழிசை குழலிசை முதலாயின வந்து அந்நோயை வளர்ப்பதையும் பொறுத்திருக்கிறவர் உலகத்திலே ஒருவரும் இல்லை என்பதாம்.

ஆக அதிகாரம் ள௧௬ க்குக் குறள் கூள௬௰

இப்பால் 117. படர்மெலிந்திரங்கல்

என்பது, நாயகன் பிரிந்து போனதினாலே தலைமகள் தன்னுடைய துக்கத்தை எப்பொழுதும் நினைத்தலின், அதனால் மெலிந்திரங்குதல்; நாயகனும் நாயகியைப் பிரிந்து போன விடத்திலே அவளை நினைத்துக் கொண்டு விசாரப்படுகிறதுமாம்.

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்

என்பது, காம நோயை வெளியாக்குகிறது உன்னுடைய நாணத்துக்கு ஏலாதென்ற தோழிக்குச் சொல்லியது:

இந்தக் காம நோயைப் பிறர் அறியாமல் யான் வெட்கத்தினாலே மறைக்கிறேன். இப்படி மறைக்கச் செய்யும் இந்தக் காம நோய் அந்த நாணத்தைக் கடந்து இறைக்கிறவர்களுக்கு ஊற்றுத் தண்ணிர் அதிகமாகிறாப் போலே அதிகமாகிறது என்றவாறு.