பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

489

என்னாலே காதலிக்கப்பட்ட காதலர், என்னிடத்திலே அன்பிலரே யாயினும், அவர் திறத்து ஒரு சொல்லும் செவிக்கு இன்பமாம் என்றவாறு. அவர் வாரலர் என்னுஞ் சொல்லாயினும் அமையும் அந்த வார்த்தையுங் கேட்டிலேன் என்பதாம்.

1200. உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்

செறாஅய் வாழிய நெஞ்சு

என்பது, தலைமகன் துாது வராதது கண்டு தான் தூது விட நினைத்தவள் நெஞ்சொடு சொல்லியது.

உன்னுடன் கூடாதார்க்கு உன் துக்கத்தைச் சொல்ல லுற்ற நெஞ்சே! நீ பிரிவு பொறுக்க மாட்டாவிட்டால் உனக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க நினைப்பாயாக; அது எளிது என்றவாறு.

நீ சொல்லுகிறது அளவில்லாத வியாதியானபடியினாலேயும், கேட்பார் உன்னிடத்திலே உறவிலரான படியினாலேயும், அது முடியாது; முடிந்தாலும் பயனில்லை என்பது கருதாது முயலா நின்றாய் என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉ௰ க்குக் குறள் சநஉள

இப்பால் 121. நினைந்தவர் புலம்பல்

என்பது, முன்கூடியிருந்த போது பெற்ற இன்பத்தை நினைந்து, பள்ளியறையிலே தலைமகள் தனியா யிருக்கிறதும், பாசறையிலே தலைமகன் தனியாயிருக்கிறதுமாம். இவர்கள் இருவரும் தனிமையாயிருந்து வருந்துகிறது.

1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்

கள்ளினுங் காம மினிது

என்பது, துாதாக வந்த பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது: முன் கூடிய நாளை யின்பத்தைப் பிரிந்த போது நினைத்தாலும் அப்பொழுது கூடிய இன்பம் பெற்றாற் போல் நீங்காத