பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

திருக்குறள்

தூதுமாய், அந்த மாலை வந்து என்னைக் கொல்லுதற்குக் கொல்லும் படைக் கலமுமாயிற்று என்றவாறு.

1229. பதிமருண்டு பைத லுழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து

என்பது

இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கித் துக்கப்பட்டேன்; இனிக் கண்டவர்களும் மதி மயங்கும் வகை மாலை வரும் பொழுது, இந்த ஊரார் எல்லாரும் மதி மயங்கி நோயுடையவர்களாவர் என்றவாறு.

1230. பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை

மாயுமென் மாயா வுயிர்

என்பது

காதலர் பிரிவைப் பொறுத்துப் பிராணனுடனே இருந்த என் உயிர், பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரைநினைந்து, இந்த மாலைப் பொழுதிலே இறந்துபோகா நின்றது என்றவாறு.

பொருள் தேடப் பிரிந்து போனவர் சொன்ன பருவத்துக்கு வாராமையின், அவர் வராதது பொருள் முடியாத படியினாலே யல்லவா? பொருளையே நினைந்தாரல்லாமல், தான் சொன்ன பருவத்தை நினைந்தாரல்லர் என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉ௩ க்குக் குறள் சதஉள௩௰

இப்பால் 124. உறுப்பு நலனழிதல்

என்பது, தலைமகள்தன் கண்ணும் தோளும் முகமும் முதலான அவயவங்கள் தம் அழகழிதல்; இது நாயகனை நினைந்து வருந்து கிறதினாலே யாம் என்பது.

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி

நறுமலர் நாணின கண்