பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

திருக்குறள்

அன்பும் அருளும் இல்லாதாரைக் கூடுவோமென்று முயலுதல் வியர்த்தமாம் என்பதாம்.

ஆக அதிகாரம் ள௩க க்குக் குறள் சந௩க

இப்பால் 132. புலவி நுணுக்கம்

என்பது, தலைமகனும் தலைமகளும் ஒர் அமளியிலே கூடியிருக்கிறபோது, அவனிடத்திலே பிணங்குகிறதற்கு ஒரு காரணம் இல்லாவிட்டாலும், காதல் மிகுதியினாலே ஒரு காரணம் உண்டாக்கிக் கொண்டு, அதனை அவன்மேலேற்றிப் பிணங்கி யிருத்தல்.

1311. பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்

நண்னேன் பரத்தநின் மார்பு

என்பது, உலாவித் திரிந்த தலைமகன் பள்ளியறையிலே வந்தானாகத் தலைமகள் சொல்லியது.

பெண்ணியல்பை யுடையா ரெல்லாரும் தங்கள் கண்களினாலே நின் மார்பைப் பாரா நின்றார்கள்: ஆதலால் அவர்கள் பார்வையினாலே எச்சிலா யிருக்கிற உன் மார்பை யான் தீண்டேன் என்றவாறு.

1312. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து

என்பது, தலைமகள் தோழிக்குக்* கூறியது:

யான் தம்மொடு பிணங்கிப் பேசாமல் இருக்கிறது கண்டு காதலர் தும்மினார், தம்மைச் சதாயுசு[1] என்று சொல்லிப் பேசுவோம் என்று கருதி யென்றவாறு.

1313. கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக்

காட்டிய சூடினீ ரென்று

என்பது தோழிக்குத் தலைமகன் சொல்லியது:*


*குறிப்புரை காண்க

  1. தீர்க்காயுசு என்பதும் மரபு