பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

525

வளைய மாலையைச் சூடினும் கோபிச்சுக்[1] கொள்ளுகிறாள். இல்லாத பூ அணிகிறது ஒருத்திக்குக் காட்ட வேண்டி என்று என்றவாறு

இப்படிப் பிணங்குகிறவளுக்குக் காரணம் தானே யுண்டாம் என்பதாம்.

1314. யாரினுங் காதல மென்றேனா ஆடினாள்

யாரினும் யாரினு மென்று

என்பது இதுவுமது

காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி, யாரினும் காதலையுடையேம் என்றேனாக, உன்தோழி அது கருதாது, என்னால் காதலிக்கப்பட்ட ஸ்திரீகள் எல்லாரிலும் யான் நின்மேல் உற்ற காதலையுடையேன் என்றேனாகக் கருதி, அம்மகளிர் யாரினும் யாரினும் எங்கண் காதலுடைய ராயினீர் என்று சொல்லிப் பிணங்கினாள் என்றவாறு.

யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது, பிறிது காரணமில்லை என்பதாம்.

1315. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்

என்பது இதுவுமது

காதல் மிகுதியினால், இந்தப் பிறப்பிலே யாம் பிரியேம் என்று யான் சொல்லக் கேட்டு, மறுமைப் பிறப்பிலே பிரிவேன் என்றெண்ணித் தன் கண்கள் நிறைய நீர் சோர அழுதாள் என்றவாறு

1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்

என்பது இதுவுமது

பிரிந்த காலத்து நின்னை இடைவிடாது நினைந்தேன் என்


  1. கோபித்துக்