பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

திருக்குறள்

“அறவாழி” என்ற குறளில் தர்மசரணமும் அமைந்துள்ளன.

10. பிறவிப் பெருங்கடல் (பக்கம் 123)

அருகக் கடவுளின் பாதங்களைச் சேர்ந்தவர் பஞ்ச பரிவர்த்தனைகளாகிய சம்சாரக்கடலை நீந்திக் கடப்பார்: சேராதவர் அந்த சம்சாரக் கடலைக் கடக்காமல் அதில் அழுந்துவர்.

பஞ்ச பரிவர்த்தனைகளாவன: திரவியம், க்ஷேத்திரம், காலம், பாவம், பவம் என்பனவாம்,

“வீசுடல மெறி திரையின் மேவு கடன் மருவுபுணை” என்னும் திருக்கலம்பகம் (செ. 53) “வினையைக் கொடுக்கின்ற தேகமாகிய மோதுகின்ற அலையோடு பொருந்திய பிறவிக்கடலுக்குப் பொருந்திய தெப்பமாம் அருகனுடைய பாதங்கள்”' என்று பொருள்படும்.

18. சிறப்பொடு (பக்கம் 139) மழைபெய்யாவிட்டால் இவ்வுலகில் தேவர்கட்கும் சிறப்பொடு உத்ஸவங்களும் பூஜையும் நடைபெறா. பூசனை முதலியன நடத்துவது அருகக்கடவுளுக்கும் அவர் அடியார்களாகிய இருபத்து நான்கு யக்ஷன்யக்ஷி முதலான தேவர்கட்கு மாகலின் “வானோர்க்கும்” என்றார்.

19. தானந்தவம் (பக்கம் 139)

மழைபெய்யாவிடில் உலகத்தில் தானமும் தவமும் நிலை பெறமாட்டா. தானமாவது, ஆகாரதானம், அபயதானம் ஒளக்ஷததானம் சாஸ்திரதானம் என்பவை.

20. நீரின்றமையா (பக்கம் 139)

உலகமானது நீரின்றி யமையாது; அங்ஙனம் அமையாதெனின் எவ்வகைப்பட்ட மேம்பாட்டினை யுடையோர்க்கும் மழையின்றி யாதொரு ஒழுக்கமும் நடவாது. ஒழுக்கமாவது: குணவிரதம் 3, சிக்ஷாவிரதம் 4 ஆக 7.