பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

541

முயற்சியால், தன்மெய் - தனது உடம்பை, வருத்த - உழைப்பிக்க, (அவ்வருத்தத்திற் கேற்ற) கூலிதரும் - (ஊழ்) பயன் கொடுக்கும். இதன் கருத்து: கடவுளாலாவதொன்று மில்லை: முயற்சியால் வினைக்குத் தக்களவு பயனுண்டாகும் என்பதாம். கடவுள் யாதொரு பொருளையும் தருவதில்லை என்பது ஜைந சமயசித்தாந்தம்.

901 மனைவிழைவார் (பக் ச௬)

மனை - தம்மனையாளை, விழைவார் - இன்பங் காரணமாக விரும்பியவர், மாண் பயன் - மாட்சிமை பொருந்திய மோக்ஷ பலனை. எய்தார் - அடையமாட்டார்கள் , (அவர்கள் ) வினை - (பொருள் சம்பாதிக்கும்) தொழிலை, விழைவார் – விரும்புகின்றவராவர். வேண்டாப் பொருளும் - (வீடு பெறுதற்குப் பகையென்று) இகழ்கின்ற பொருளும், அது - அத்தன்மையதே. இதன் கருத்து: மனையாளை விரும்பியவர் பொருள் சம்பாதிக்கும் தொழிலில் ஆசையுடையவர்: இவர்கள் மோட்சத்தை அடையார் என்பதாகும்.

945 மாறுபாடில்லாத (பக்கம் 70)

மறுத்து - (புலால் கலந்த மருந்து முதலிய ஆகாரங்களை) நீக்கி, மாறுபாடில்லாத - விகற்பமில்லாத, உண்டி - பரிசுத்தமுள்ள மருந்து முதலிய வுணவுகளை, உண்ணின் - (ஒருவன்) உண்பானாயின், உயிர்க்கு - அவனுயிர்க்கு, ஊறு - கொலைச் சார்பினால் உண்டாகிற பாடு - துன்பம், இல்லை - உண்டாவதில்லை.

946 இழிவறிந்து பக்கம் (71)

இழிவறிந்து - (புலால் மிஸ்ரமுள்ள மருந்து முதலியவைகள்) குற்ற மென்றறிந்து, உண்பான் கண் - (பரிசுத்த முள்ள மருந்து முதலிய வுணவுகளை) உண்பவனிடத்து, இன்பம் போல் – இன்பத்தைப் போன்று, கழிபேரிரையான் கண் - வியாதிகளுக்கு மிகப் பெரிய அனுகூல மென்று புலால் கலப்புள்ள மருந்து முதலியவைகளை உண்பவனிடத்து, நோய் - துன்பம், நிற்கும்– நீங்காது தங்கும்.