பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

557

533. அச்சுநூலிற் கண்டவுரை பின்வருமாறு:

பொச்சாப்பாகிய மறப்புடையவர்களுக்குக் கீர்த்தியில்லை. அவ்வின்மை இந்நீதி நூல் உடையவர்களுக்கேயன்றி, உலகத்து எவ்வகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்ப முடிந்தது.

539.

இகழ்ச்சியில் கெட்டார்க்குக் காலிங்கர் உரையில் “பாரதத்தில் நூற்றுவரையும், இராமாயணத்து இராவணனையும் பிறரையும் எண்ணிக் கொள்க” என்றுளது.

548.

தாழ்ந்தவிடம் - பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை (பரிமேலழகருரை)

565.

பேயைக் கண்டால் பயப்படுமாறு போலக் குற்றம் உண்டாம் என்ற விடத்தில், அச்சுநூலில், பேயால் காணப்பட்டாற் போல்வதொரு குற்றமுடைத்து என்றுள்ளது. பின்னர்க்கண்ட து பரிமேலழகருரை.

573. “யாழ்குழலாகியதும்” என்ற இடத்தில் பாலையாழ் முதலாகியதும் என்று அச்சுது நூலில் காணப்படும். மிடற்றில் ...... ஐந்து - பின்வரும் சீவக சிந்தாமணி 735 ஆம் செய்யுளுரையில், நக்கினார்க்கினியர் காட்டிய மேற்கோள் பாடலால் அறியப்பெறும்:

“எடுத்தல் பாட் டுச்சமாம்; எண்படுத்தல் மந்தம்:
தடுத்து நலிதல் சமமாம்:- தொடுத்தியன்ற
தள்ளாத கம்பிதம் தானடுக்கல்: நற்குடிலம்
உள்வாங்கிப் பாட லுணர்”

உச்ச ஸ்தாயியில் பாடுதல் - எடுத்தல்: மந்தமாகப் பாடுதல் - மந்தம்: இடைப்பட்ட நிலையில் பாடுதல் - சமம், நடுங்கல் - கம்பிதம்;

உள்வாங்கிப் பாடுதல் - குடிலம்

வண்ணங்கள் 76 : (வண்ணம். நான்கடியான் வருவது) பெருவண்ணம் 6: இடைவண்ணம் 21; வவப்பு