பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558

திருக்குறள்

வண்ணம் 49 (சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, அடியார்க்கு நல்லாருரை)

591.

ஊக்கம் என்பதற்கு அறிவுடையவர்கள் என்று காகிதச் சுவடியிலுள்ளது. அடுத்த குறளுரையில் ஊக்கமாகிய அறிவுடைமை என்பர்.

600.

உரம் - அறிவு உள்ள வெறுக்கை என்பதற்கு ஊக்க மிகுதி என்று பரிமேலழகர் பொருள் தந்தார். உள்ளம் - ஊக்கம்; வெறுக்கை - மிகுதி. காகிதச் சுவடியில் உள்ள வெறுக்கை என்பதற்கு “மிகுத்ததே பொருள் ஆவது” என்ற உரைஉளது. வெறுக்கை - பொருள். அஃது என்ற சுட்டு, பரிமேலழகர் உரைப்படி ஊக்க மிகுதியையும் இச்சுவடியில் பொருளையும் குறிக்கும்.

608.

இடிபுரிந்து என்பதற்கு அச்சுநூலில் “சுற்றத்தார் முன் கழறுதலை மிகச் செய்து” என்று உரையுளது. காகிதச் சுவடியில் ஆகாத விசேஷங்களைப் பேசி என்றுளது. அச்சு நூல் பரிமேலழகருரையை யொட்டியது. சிறப்புரையில் “முன்னிகழ்ந்து பேசினபடியினாலே” என்றிருப்பதால் “இடி புரிந்து” என்பதற்குக் காகிதச் சுவடியுரை “முன் இகழ்ந்து பேசி” என்றிருத்தல் தகும். (விசேஷங்களை விஷயங்களை)

610.

“அடியளந்தான்” என்பது வாளா பெயராய் நின்றது என்பர் பரிமேலழகர். இச்சுவடியில் “சகல லோகத்தையும் அறிந்த சுவாமி” என்று தம் சமயத்திற் கேற்பவுரைக்கப் பட்டுள்ளது.

524.

காகிதச் சுவடியில் தவறு பட உள்ள பகுதி பின்வருமாறு அச்சுநூலில் உள்ளது:

மருங்கு ஏற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும் சேற்றிலிருந்து அரிதின் உய்க்குமாறு போலத் தன்மெய் வருத்தம் பாராது முயன்று உய்ப்பானுக்கு இடையூறு