பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

563



காரணம் காட்டியோ அல்லது வேறு வகையாலோ தெளிவிக்கத் தலைவி தெளிதல்.

1110.

உடன் போகின்றான் - உடன் போக்கு நிகழ்த்துகிறவன் உடன்போக்கு: தலைவியைப் பெற்றோர் அயலானுக்குத் தம்மகளை மணம் பேசியோ, தலைவன் தலைவியைக் காண முடியாதவாறு கடுங்காவற்குட்படுத்தியோ இது போன்றவற்றால் தலைவிக்கு ஆற்றாமை பெருகும். இதனை அறிந்த தலைவன் தோழியொடு சூழ்வன்; உடன் அழைத்துச் செல்ல உடன்படுவன். தோழி தலைவியை உடன்போக்குக்கு இணையச் செய்வள். தலைவன் தலைவியைத் தன் ஊர்க்கு அழைத்துச் செல்வன்.

1115.

பகற்குறி: தலைமகன் கொடுத்த தழையை யேற்ற தலைமகளைத் தோழி தலைமகனுடன் பகலில் குறிப்பிட்ட இடத்தில் தலைவியை இருக்குமாறு செய்தல்.

1116.

இரவுக் குறி . தலைவன் தலைவியை இரவுப் பொழுதில்

குறிப்பிட்ட இடத்தில் கூடுதல்.

1125.

ஒருவழித்தணத்தல் : தலைமகளைக் களவொழுக்கத்தால் தலைவன் புணருங்கால் அலர் எழும்; அந்த அலர் அடங்கச் சிலநாட்கள் தலைமகனைப் பிரிந்து உறைவள் இதுவே ஒரு வழித்தணத்தல்.

(அலராவது, களவுப் புணர்ச்சியைப் பலர் அறிந்து பேசுதல்)

114.

நாணுத்துறவுரைத்தலாவது.

நாணத்தை விட்டமை தோன்றும் பேச்சுப் பேசுதல். அறத்தொடு நிற்றலாவது. தலைவியின் களவொழுக்கத்தை முறையே வெளிப்படுத்துதல். அதாவது தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும், பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிறகும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்கும்.

1139.

சிலர் அறிந்து புறங்கூறலும் பழித்தலும், அம்பல்.

பலர் அறிந்து தூற்றுதல் - அலர்