பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருக்குறள் தயையுடனே கூடி நல்ல வார்த்தைகளைச் சொல்லுகிறவர் களிடத்திலே கொலையும் பொய்யுங் களவு மில்லை யென்ற வாறு. தி 92. அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின் என்பது மனசு சந்தோஷத்துடனே ஒருவற் கொரு பொருளைக் கொடுக்கிறத்திலும் நல்லது, இரக்கிறவனைக் கண்ட பொழுதே முக மலர்ந்து நல்ல வசனங்களைச் சொன்னாலென்றவாறு. நல்ல வசனங்க எளில்லாமற் கடின வசனங்களை ச் சொல்லிக் கொடுக்கிறதினாலே பலனில்லை; நல்ல வசனஞ் சொல்லிப் பிரியத்துடனே கொடுத்தால் பலனா மென்றவாறு. P_ 93. முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மினிசொ லினதே யறம் என்பது கண்ட பொழுதே முகமலர்ந்து சந்தோஷமாகப் பார்த்து மனதிலே தயவுடனே கூடி நல்ல வசனங்களைச் சொல்லுகிறதே தர்மமென்றவாறு. - நல்ல வசனத்தினாலே புண்ணிய முண்டா மென்பதாம். புர். 94. துன்புறுவுந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறுவு மின்சொ லவர்க்கு என்பது நல்ல வசனங்களைச் சொல்லுகிறவர்களுக்கு எல்லாரிடத் திலேயும் உறவும் நன்மையுமுண்டாம்; எல்லாரும் நன்மை 1. கொடுக்கிறதிலும் 1. கொடுக்கிறதினாலே 2. I. லினஃதே என்பது அச்சு நூல் துன்புறுஉந் 2. மின்புறுஉ என்பனவே சரியான பாடம் 3. அவர்கள்