பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - களவியல் 234

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினை உடையதாகும்! 112? இம் மட ந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும். 1122 கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய துதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை. 1123 இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்! #24 ஒள்ளியவாய் அமர்த்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன். அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ! ዘ25

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார்; எம் கண்களை இமைத்தாலும் வருந்தார். அவ்வளவு நுண்ணியவர் அவர், 1126 காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன். 1127 காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்! 1728 இமைப்பின் அவர் மறைவார் என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே! 1129 எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர் என்று இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே! 芮30