பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தெரிந்து வினைய்ாடல்' என்பது போல் இந்த அதிகாரமும் முடிகிறது. முதற்குறட்பா ஒற்றினது இலக்கணத்தைக் கூறு: கின்றது. ஒற்றினது சிறப்பினையும் விளக்குகின்றது. இரண்டாம் குறட்பா ஒற்றினாலாய பயனைக் கூறுகின்றது. மூன்றாம் குறட்பா ஒற்றினாலாய தொழில் செய்யா விட்டால் வரும் குற்றத்தினை எடுத்துக் காட்டுகின்றது. நான்கு, ஐந்து, ஆறு, எழு குறட்பாக்கள் ஒற்றினது. விரிவான இலக்கணத்தையும் முறைகளையும் தெளிவு படுத்துகிறது. கடைசி மூன்று குறட்பாக்கள் ஒற்றரை ஆளும் திறத்தினையும், அவரால் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறுகின்றன. ஒற்றினை யும், நீதி நூல்களையும், ஊனக்கண்ணும் ஞானக் கண்ணு. மாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது முதற் குறட்பாவின் குறிப்பாகும். புகழமைந்த நீதிநூல்களை உரைசான்ற நூல் என்று கூறினார். - . வேந்தனுடைய தொழிலுக்கு ஒற்றர்கள் இன்றியமை, யாதவர்கள் என்பதனை இரண்டாம் குறட்பா தெளிவு. படுத்துகிறது. ஒற்றர்கள் இல்லாதவன், இல்லாத மன்னன் வெற்றியடைதல் கிடையாதென்று மூன்றாம் குறட்பா கூறும். தொழில் செய்பவர்களை முன்னதாக வைத்து நான்காம் குறட்பா கூறுவது மிகுதியும் சிந்திக்கத் தக்க தாகும். ஒற்றர், தொழில் செய்பவன் தோற்றம், மிகவும். கவனிக்கத்தக்கதாகும். பிறர் பார்த்துச் சிறிதும் ஐயுறாத வடிவத்தில் அவன் இருக்கவேண்டும். இதனை ஐந்தாம் குறட்பா கூறும். எப்படிப்பட்ட உருவத்தில் செல்லுதல் நல்லது என்பதனை ஆறாம் குறட்பா தெளிவுபடுத்துகிறது. மன்னவன்கண்- வல்அறிதல்- ஆராய்வது- வல்லதே று- சோர்விலது ஒற்று- ஐயப்பாடு இல்லதே- என்று வும் பிறவும் ஒற்றினது சிறப்பினையும் பயனையும் நன்கு விளக்குவனவாகும். பொதுமக்களுக்குத் தெரிந்து