பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | கொள்ளாதபடி ஒற்றர்கள் வைக்கப்பட வேண்டியவர்கள் ஆனபடியால், மன்னன் பலரும் அறியும்படி அவர்கட்குச் சிறப்பு செய்தல் கூடாது என்று பத்தாம் குறட்பா குறிப்பாக உணர்த்துகிறது. - 60. ஊக்கம் உடைமை மனம் மெலிதல் அடையாமல் தொழில் செய்யுங்கால் கிளர்ச்சி உடையவர்களாக இருத்தலாகும். உடைமை" என்ற அடைமொழியுடன் இருக்கும் பத்து அதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். வினை செய்பவனுக்கு இவ்வியல்பு மிகவும் இன்றியமையாததாகும். முதல் நான்கு குறட்பாக். களிலும், ஒருவன் பெற்றிருக்கும் செல்வத்தினைவிட அதனைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த ஊக்கம். சிறப்புடையதாகும் என்று கூறுகின்றன. ஐந்து, ஆறு, ஏழு. பாடல்கள் ஊக்கம் உடையவர்களது உயர்ச்சியினைக் கூறு கின்றன. கடைசி மூன்று குறட்பாக்களும் ஊக்கம் இல்லா தாரது இழிவினை விளக்குவனவாகும். ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய மூன்று குறட்பாக்களும் சிறந்த உவமைகளைக் காட்டி ஊக்கமுடைமையின் அரிய. பெருமையினைத் தெளிவுபடுத்துகின்றன. உடையர் எனப்படுவது ஊக்கம்-உள்ளம் உடைமை-அல்லாவார்உள்ளத்தனையது உயர்வு-உள்ளுவது எல்லாம் உயர்வு: உள்ளல்- சிதைவிடத்து ஒல்கார்- உள்ளம் இலாதவர்" எய்தார்-உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை, என்று கூறம் பட்டன யாவும் என்றென்றும் மனதில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியனவாகும். இவைகள் மிகச் சிறந்த எண்ணங்களை உண்டாக்குவனவாகும். பத்தாம் பாடல் ஊக்கம் இல்லாதவர்களை மரம் என்று. கூறியது சிந்திக்கத் தக்கதாகும். வடிவத்தால் மக்கள்