பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 மிகுந்த வலிமையுடையதேயாகும். அதனையும் புறங் காணுதல் முடியும் என்பது கூறப்பட்டது. ஊழ்' என்பதும் "தெய்வம்' என்பதும் இயற்கை என்பதும் விதி' என்பதும் ஒரே பொருளினைக் குறிப்பதாகும். இயற்கையின் செயல் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் ஒரே வலிமை யுடன் இருப்பதன்று. இயற்கையின் செயல் குன்றி முயற்சி யின் செயல் மேம்பட்டிருக்குமேயானால் முயற்சி வெல்லும். இயற்கையின் செயல் மிகுதிப்பட்டு முயற்சியின் வன்மை குறைந்திருக்குமேயானால் இயற்கைவெல்லும். மழைபெய்து ஆறுபோல் தண்ணிர் ஓடிக்கொண்டி ருக்குமேயானால் அதனைக்கடக்க முடியும். இயற்கையினை முயற்சி வென்றது. பெரும் வெள்ளமாகத் தண்ணிர் ஒடுமேயானால் கடக்க முடியாது. இயற்கை வென்றது. ஆதலால் மனிதஅமைப்பில்-வாழ்வில்-இயற்கையென்னும். "ஊழ் வன்மை மிக்கதாக இருக்கும் காலமும், முயற்சி அதிக வலிமையுடையதாக இருக்கும் காலமும் அறிந்தறிய முடியாததாகையால் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருத்தல் வேண்டும் என்பதனை பத்தாம் குறட்பா உணர்த்திற்று. 63. இடுக்கண் அழியாமை தொழிலின் முயற்சியினை மேற்கொண்டிருக்கும்போது, இயற்கையினாலாவது, பொருளின்மை காரணமாகவாவது துன்பம் வந்தபோது அதற்கு மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதாகும். இடுக்கண்' என்பது துன்பம் என்பதைக் குறிக்கும். மனங்கலங்குதல் கூடாது என்பதை "அழியாமை" என்பது குறிக்கும். அழியாமை" என்று வேறு எந்த அதிகாரமும் முடியவில்லை. காமத்துப் பாலில், அழிதல்' என்று இரண்டு அதிகாரங்கள் முடிகின்றன. அவை நிறை அழிதல் உறுப்பு நலன் அழிதல்" என்பன வாகும். - * - -