பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 'இடுக்கண் அழியாமை" என்ற இந்த அதிகாரத்தின் முதலிரண்டு குறட்பாக்களும், துன்பம் உண்டான போது மனங்கஸ்ங்கி அழியாதிருக்க வேண்டுமென்றும் அதற்கு வழியினையும் கூறுகின்றன. மூன்று நான்கு ஐந்து பாடல் களும் தொடர்ந்து துன்பங்கள் வரவும் கூடும் என்பதைக் குறிக்கின்றன. ஆறாம் குறட்பா, பொருள் குறைந்தபோது துன்புறுதல் கூடாது என்று கூறுகின்றது. ஊழ்" என்ற அதிகாரத்தில் கூறப்படும் ஒன்பதாம் குறட்பாளினையும் இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். கடைசி நான்கு குறட்பாக்களும் மெய்வருத்தத்தால் துன்பம் உண்டாள போது, அதற்கு மனம் கலங்காதிருக்க வேண்டுமெனறும், அதற்கான வழி யினையும் எடுத்து விளக்குகின்றன. நான்காம் குறட்பா, சேற்று நிலத்தில் சுமையேற்றிய வண்டியினை இழுத்துச் செல்லும் எருதினைக் காட்டி முயன்று தொழில் செய்ய வேண்டும் என்பதனைத் தெளிவு படுத்துகிறது. இடுக்கண்' வந்தபோது மனம் கலக்கம் அடைந்து விட்டால், அறிவும் இருளடைந்துவிடும். மேற்கொண்டு முயற்சி செய்ய முடியாமல் போய்விடும். ஆதலால் நகுக" என்று கூறிய முதற்குறட்பா, இடுக்கணை நீக்கும் வழியினைக் கூறிற்று என்பதாகும். - அறிவுடையான் மிகவும் சிறந்தவனாவான். வெள்ளத் தினைப்போல் துன்பம் வந்தாலும் அது அறிவுடையவனை ஒன்றும் செய்துவிட முடியாது. அவன் மனதில் நினைத் தாலே இடும்பை கெட்டுவிடும். இரண்டாம் குறட்பா நன்கு விளக்கம் தருகிறது. மூன்றாம் குறட்பா இக்கருத்தினை நயம்பட எடுத்துக் காட்டுகிறது. நான்காம் குறட்பா உவமையுடன் இவ்வுண்மையினை மெய்ப்பிக்கின்றது. துன்பம் அடுக்கடுக்காக வருதல் உண்டு என்பதனைக் காட்டி அப்படியே வந்தாலும் மனங்கலங்காத அறிவுடையான் அவைகளை அழித்து விடுவான் என்று ஐந்தாம் குறட்பா