பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 துrது உரைப்பான் . தூது உரைப்பார்க்கு - வினை. :உரைப்பான் . எண்ணி உரைப்பான் . வழி உரைப்பான் - வேந்தர்க்கு உரைப்பான் . என்று பற்பல குறட்பாக்களில் காணப்படுவதெல்லாம், தூது செல்லுபவன் சொல்வன் மையில் சிறந்தவனாக . மிக்க வனாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றன. அறிவு, ஆராய்ந்த கல்வி -யுடன் சிறந்த உருவம் அவனுக்கு இருத்தல் வேண்டுமென்று நான்காம் பாடல் தெளிவுபடுத்துகிறது. வேற்றரசர் மனங் கொள்ளச் சொல்லவேண்டும் என்பதற்காக நகச் சொல்லி” என்று ஐந்தாம் பாடல் கூறுகிறது. தூதுவன் அஞ்சாத மனம் படைத்தவராக இருத்தல் வேண்டும் எதற்கும் ஏமாற்றப்படாமல் இருத்தல் வேண்டும் என்பதற்காக தூய்மை வாய்மை" என்று எட்டாம் பாடல் உரைக்கின்றது. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப் பான் - இறுதி பயப்பினும் . என்று முறையே ஒன்பது, பத்துப் பாடல்கள் கூறுவது, தூதுவனின் பொறுப்பினையும் திறத்தினையும் எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. w 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் அமைச்சர்கள் மன்னர்களைச் சேர்ந்து ஒழுகும் முறை களைக் கூறுதலாகும். முந்திய அதிகாரத்தில் வேந்து அவாம் பண்பு உடைமை என்று கூறிய விளக்கத்தினை இவ் அதிகாரம் கூறுவதாகும். பொதுப்படக் கூறுமிடத்து தலைமைதாங்குபவரிடம் பழகும் தன்மைகளைக் கூறுவது என்றும் கொள்ளலாம். வேற்று வேந்தர்களிடம் பழகும் தன்மைகளையும் விளக்குகின்றது. முதல் மூன்று குறட்பாக்களும் பொதுவகையில் விளக்கம் தருகின்றன. நான்குமுதல் ஏழுபாடல்கள் வரை சிறப்புவகையால் விளக்கம் தருவனவாகும். கடைசி மூன்று பாக்களும் மன்னர்கள் பொறுத்துக் கொள்ளுவார்கள்