பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 மறை, சொலல், இளையர், இகழார், கொளப்பட்டேம், பழையம், பண்பு, ஒழுகல், கெழுதகைமை முதலிய. சொற்கள் சிறந்த கருத்துக்களைக் குறிப்பனவாகும். 71. குறிப்பு அறிதல் அரசர் கருதிய கருத்துக்களை அவர் கூறாமலேயே அறிதல், பொதுவாகக் கூறுங்கால் பிறர் உள்ளத்தில், உள்ளதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ளும் ஆற்ற லாகும். காமத்துப் பாலில், குறிப்பறிதல்' என்றொரு அதிகாரமும், குறிப்பறிவுறுத்தல்" என்றொரு அதிகாரமும் இருக்கின்றன. முதன் மூன்று குறட்பாக்களும் குறிப்பறி" பவரது சிறப்பினைக் கூறுகின்றன. - நான்கு, ஐந்து பாடல்கள் குறிப்பினை அறிய மாட்டாரது இழிவினைக் கூறுகின்றது. குறிப்பறிவதற்குக் கருவியாக இருப்பது முகம் என்று, ஆறு, ஏழு, எட்டு ஆகிய மூன்று பாடல்களும் விளக்கம் தருகின்றன. ஒன்பதாம்,. பத்தாம் பாடல்கள் குறிப்பறிவதற்கு நுண்கருவியாக இருப்பது, நோக்கு, என்று தெளிவுபடுத்துகின்றன. குறிப்பறிதல் என்பது எல்லோராலும் முடிவதொன் றன்று. அதற்கென்று சிறந்த ஆற்றல் பெற்றிருக்க வேண் டும். ஆதலால்தான் அத்தகைய ஆற்றல் பெற்றவர்களை முதற்குறட்பா, மாறாநீர் வையக்கு அணி என்று சிறப்பாக எடுத்துரைக்கின்றது. இரண்டாம் குறட்பா, குறிப்பறி வானைத் தெய்வத்திற்குச் சமமாக வைத்துக் கருதுமாறு கூறுகின்றது. மனித ஆற்றலுக்கு மிகமிக மேம்பட்டவன் என்பது இயற்கையின் ஆற்றலுக்கு இணையானவன் என்பதாகும். இயற்கை ஆற்றலினை தெய்வீகசக்தி' என்று கூறுவது உலக வழக்காகும். குறிப்பறிபவர்கள் கிடைப்பார்களே: யானால், அவர்கள் விரும்புவது யாதாக இருந்தாலும்.