பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 ஆராயாமல் நட்பு செய்தல் போல கேடுபயப்பது பிறி' தொன்றுமில்லையென்று முதல் குறட்பா தெள்ளத் தெளி வற்புறுத்துகிறது. : இக்குறட்பாவில் கேடு இல்லை வீடு இல்லை" என்பவைகள் சிந்திக்கத் தக்கவைகளாகும். நன்றாக ஆ ர | ய | ம ல் நட்பு செய்து விட்டால் சாகும் நிவைக்குத் துன்பம் உண்டாகிவிடும் என்று இரண்டாம் குறட்பா கூறுகின்றது. ஆராயாமல் தீயவனோடு நட்பு கொண்டு விட்டால், அவனுக்கு வருபவையெல்லாம் தனக்கும் ஆகும் என்பதாம். இரண்டாம் குறட்பாவில், ஆய்ந்து ஆய்ந்து என்று இருமுறை சொல்லி இருப்பதும், தான்சாம் துயரம் தரும்’ என்பதும் ஆழ்ந்த உண்மை. யினைப் புலப்படுத்தி விட்டனவாகும். - மூன்றாம் குறட்பா நான்கு குறிப்புக்களைத் தருகின்றது. இந்த நான்கினையும் கண்ட பிறகே நட்பு செய்தல் வேண்டும். இப்பாடலில், அறிந்து யாக்க' என்று வற்புறுத் தினார். ஏதேனும் கொடுத் தாயினும் நட்பு செய்தல் வேண்டும் என்று நான்காம் பாடல் கூறுகின்றது. நல்ல அரிய நண்பர்கள் கிடைத்தால் எப்படியும் அவர்களை நண்பர் களாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இப்பாடலில் கொடுத்தும் கொளல் வேண்டும்" என்று கூறியிருப்பது,பன்முறையும் சிந்திக்கத் தக்கதாகும். எப்படிப் பட்டவர்களை மிகச் சிறந்த நண்பர்களாகக் கொள்ளுதல் வேண்டும் என்று, ஐந்தாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. அழும்படியாகக் கூட இடித்துச் சொல்லிநண்பனை நல்வழிப் படுத்துபவனே உயர்ந்த நண்பனாவான். அழச்சொல்லி" இடித்து வழக்கறிய வல்லார்' என்பவைகளெல்லாம் இந்த, ஐந்தாம் பாடலின் அருமையினை விளக்குகின்றன. ஒருவனுக்குக் கெடுதி உண்டாவதும் ஒரு விதத்தில் நன்மையே யாகும் என்று ஆறாம் பாடல் குறிக்கின்றது. தன்னுடைய நண்பர்களை அளந்து பார்ப்பதற்கு அளவு: