பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 படைச் செருக்கு, படைமாட்சி, அறிவுடைமை, அன்புடைமை, பெரியாரைத் துணைக் கோடல், ஈகை, வெகுளாமை, பண்புடைமை, குற்றம் கடிதல், கல்வி, கல்லாமை, முதலிய அதிகாரங்களை நினைவுபடுத்தும். குறிப்புக்கள் பல இவ்வதிகாரத்தில் காணப்படுகின்றன. பத்தாம் பாடலில் காணப்படும் சிறு பொருள் பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறப்படும் ஒன்னார்த்தெறு. பொருள்' என்பதனோடு ஒப்பிடற்குரியது. பிறவும் அவை: òt arrêð &;rreòr&s. 88. பகைத்திறம் தெரிதல் பற்பலவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவைகளைக் கூறுவதாகும். பகைவர்கள் பலவகைப் படுவார்கள் ஆனபடியால் திறம் தெரிதல் என்று கூறினார். நம்மைவிட வலிமை மிக்க பகையை ஆக்குவதினால் வரும் குற்றமும் முன் ஆகிநின்ற பகைக்குள் நட்பாகக் கொள்ளுதற். குரியதும், நடுவுநிலையிற் வைக்கப்பட வேண்டியதும், அவற்றின்கண் நடந்து கொள்ளவேண்டிய முறையும், நீக்க வேண்டிய பகையின்கண் செய்ய வேண்டியனவும், நீக்க வேண்டிய காலமும், நீக்காவிட்டால் வரும் குற்றமும், என்று. கூறப்படும் இத்தகைய திறங்களை ஆராய்ந்தறிதலாகும். விளையாட்டிற் கண்ணேயானாலும் பகை என் ாதனை விரும்பவே கூடாதென்று முதற் குறட்பா கூறு கின்றது. நகையேயும் வேண்டற்பாற்று அன்று என்று முதற் குறட்பா முடித்துக் கூறுகின்றது. முதல் மூன்று: குறட்பாக்களும், பகை கொள்ளுவதினால் வரும் குற்றத். தினைப் பொது வகையாலும் சிறப்பு வகையாலும் கூறு: கின்றன. நான்கு, ஐந்து குறட் பாக்க ள் பகையினையும் நட்பாக்கிக் கொள்ளுதல் பற்றி விளக்கம் செய்கின்றன.