பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பால் தனக்கு வரும் தீங்கினைக் கூறுகின்றன. ஏழு, எட்டு. பாடல்கள் அவனுடைய குடிமக்களுக்கு வரும் தீமையினை எடுத்துக் கூறுகின்றன.

ஒன்பதாம் பாடல் உட்பகை, சிறிது தானே என்று இகழப்படாது என்பதனைக்கூறுகின்றது. மனப் பொருத்தம் இல்லாதாரோடு சிறிதளவும் கூடி வாழக்கூடாது என் பதனைப் பத்தாம் பாடல் குறிக்கின்றது. திருக்குறளில் வேறு எந்த அதிகாரத்திலும் காணப்படாத புதுமை இந்த அதிகாரத்தில் காணப்படுகிறது. இந்த அதிகாரம் ஒன்றிலேயே, ஏழு குறட்பாக்கள் உவமை முகத்தான் உட்பகையின் கொடுமையினை விளக்கிக் கூறு மாறு அமைக்கப்பட்டுள்ளன. நிழல், நீர், வாள், கேள், மட்பகை, செப்பு, அரம், பொன், எள், பாம்பு முதலியவை களைக் காட்டி உட்பகையின் கொடும் தீமையினைக் கறுகிறார், ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டியனவான நீரும் நிழலும் முதலில் இனியவேனும் பின் நோய் செய்வன வாகும். அது போல, தாயாதிகள்" என்று உலக வழக்கில் கூறப்படும் தமர் என்ற வகையினரும் உட்பகையாதற். குரியவர்கள் என்பதனை முதற் குறட்பா சுட்டிக் காட்டு .கிறது. "இன்னாவாம்’ என்பது குறட்பா கூறுவதாகும். "வாள்' போன்ற பகைவர்களை அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் வெளிப்படையாகத் தெரிபவர்களாவார்கள். உறவினர் - நண்பர் - போலவே இருப்பவர்களைத்தான் அஞ்சுதல் வேண்டும். வாள்போல் கேள்போல்’ என்று இரண்டாம் குறட்பா குறிக்கின்றது. - குயவனார் மட்கலத்தினை அறுக்கும் கருவியினைக் காட்டுகிறது மூன்றாம் குறட்பா. அக்கருவி வெளிக்கு À