பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 தோன்றாமல் உள்ளிருந்தே அறுப்பதாகும். மட்பகையின் மாணத் தெறும் என்று மூன்றாம் குறட்பா கூறுகின்றது.

  • ஏதம்பலவும் தரும்" என்று நான்காம் குறட்பா கூறி, உட். பகையின் தீமையினைக் காட்டுகிறது. உறவின் முறையால் உட்பகைத் தோன்றி விடுமாயின் அது இறக்கின்ற நிலைமை யினையும் உண்டாக்கி விடும் என்று ஐந்தாம் குறட்பா கூறு. கின்றது. நான்காம் குறட்பாவும், ஐந்தாம் குறட்பாவும். *ஏ தம்பலவும் தரும்" என்று முடிவது, சிந்தித்தறிய வேண்டிய உண்மையினைப் புலப்படுத்துகின்றன.

தனக்கு உள்ளாயினார் மாட்டுப் பகைமை உண்டாகி விட்டால் - அதாவது உட்பகை வளர்ந்து விட்டால், இறவாமை வாராதிருத்தல் முடியாததாகும். எப்படியும். உயிருக்கு ஆபத்து வந்தேவிடும். - செப்பு என்கின்ற - மரத்தாலான பொருள் . மூடியுடன் பொருத்தப்பட்டு விட்டால் பொருந்திய இடம் தெரியவே தெரியாது. அப்படி இருக்கும் உட்பகை என்பது என்று, ஏழாம் குறட்பா கூறுகிறது. அரமும் பொன்னும், எள்ளின் சிறுமை,குடிலும் பாம்பும், ஆகிய இவைகள் முறையே, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய குறட்பாக்களில் கூறப்பட்டு உட்பகையின் தன்மை-கொடிய தன்மை விளக்கப்பட்டது. சிறிதேயாயினும் உட்பகை. அஞ்சப்பட வேண்டியதே என்று குறிப்பால் உணர்த்தப். பட்டது. 90. பெரியாரைப் பிழையாமை ஆற்றல் மிகுதியான பெரியார்களிடத்தில் நடந்து. கொள்ள முறை கூறப்பட்டது. அவர்களை நன்குமதிக்காமல் நடந்து கொள்ளுதல் கூடாது. வலிமை மிக்க அரசர்களை யும், ஆற்றல் நிறைந்த தவத்தோர்களையும், பெரியார்கள் என்று குறிப்பிட்டார். "பெரியாரைத் துணைக்கோடல்"