பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வேண்டும். zehar? என்பது கள் வினைப்பயில்வார் என்று கூறுவது போன்றதாகும். பகைவரால் அஞ்சப்படாமை - புகழினை இழத்தல் ஆகிய இரண்டும் கள்ளின் மேல் காதல் கொண்டு நடப் பவருக்கு உண்டு என்று முதற்குறட்பா தெளிவாகக் கூறுகின்றது. சான்றோர்கள் ஒருபோதும் இவர்களை மனிதர்களாகவே கருதமாட்டார்கள் எனறு இரண்டாம் பாடல் கூறுகின்றது. எண்ணப்பட வேண்டாதார் ' என்று குறட்பா குறித்துக் காட்டுகிறது. தன் மகன் செய்யும் குற்றம் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுகின்ற தாயும் மிகுந்த துன்பமடைவார் என்று, 'ஈன்றாள் முகத்தேயும்இன்னதால்" என்பதாக மூன்றாம் குறட்பா குறித்துக் காட்டுகிறது. நாண் என்கின்ற பெண் கள்ளுண்பார்களை விட்டு நீங்கி விடுவாள் என்று நான்காம் குறட்பா விளக்கம் தருகிறது. நானமில்லாதவன் ம ணி த ேன ய ல் ல என்பதாகும். "நாணுடைமை' என்ற அதிகாரம் கருதற்பாலதாகும், ஒருவன் விலை கொடுத்துக் கள் குடித்து தனது மதியினையும் மெய்யினையும் மறக்கின்ற நிலை அடைகின்றானே என்று ஐத்தாம் குறட்பா விளக்கம் தருகின்றது. குடிப்பவர்களும் நஞ்சுண்பவர்களும் ஒன்றுதான் என்று ஆறாம் குறட்பா தெளிவு படுத்துகிறது. செய்தாரின் வேறல்லார்' என்று கூறும் கருத்து ஆழ்ந்த பொருளினைக் கொண்டதாகும். ஊரார் எக்காலத்திலும் இழிவாகப் பேசி நகுவர் என்று ஏழாம் பாடல் குறிக்கின்றது. மனதில் மறைவாக இருந்த தெல்லாம் வெளிப்பட்டு விடுவ தாகும் என்று எட்டாம் குறள் கூறுகிறது. அவனுக்குப் புத்தி மதி கூறுவதும் முடியாததாகும் "கீழ்நீர்க்குளித்தானை என்று கூறும் ஒன்பதாம் குறட்பா சிறப்பாக கருத்தினை உணர்த்து கின்றது. கள்ளுண்ணாத போது, கள் உண்டவன் அடை