பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 உணவு, முதலியவற்றால் நோய்கள் வருவன உண்டு என்பதாகும். உணவும் செயல்களும் அவனவன் அளவுக்கு மீறி இருந்தால் நோயுண்டாகும். "வளிமுதலா எண்ணிய மூன்று' என்று முதற் குறட்பா முடிகிறது. வாதப்பகுதி பித்தப் பகுதி, ஐப்பகுதி (சிலேத்துமம்) என்று மூன்று வகைகளாகக் கூறப்படுவதை மருத்துவ நூல்களில் காணுதல் வேண்டும். அளவுடன் இருத்தல் வேண்டும் என்பது முதற் குறட்பா குறித்துக் காட்டுவதாகும். இரண்டு முதல் ஐந்து பாடல்கள்வரை, உண்ணப்படுவன வும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன, ஆறு, ஏழு பாடல்களால் அவ்வாறு உண்ணாவழி உண்டா கும் குற்றம் கூறப்பட்டது. எட்டு, ஒன்பது பாடல்கள். குற்றம் உண்டானபோது மருத்துவன் தீர்க்கும் வழி கூறப் பட்டது. - பத்தாம் பாடல் நோய் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகின்றன. எல்லா நாட்டிற்கும். எல்லாக் காலத்திற்கும் பொருந்துவனவற்றைக் கூறுகின்றாரான படியால், பொதுவான முறைகளை மட்டும் கூறினார். மருந்துகளும் தீர்க்கும் முறைகளும் காலத்திற் கேற்ப அறிவின் முதிர்ச்சியால் மாறி மாறி வருதல் கூடும் ஆனபடியால் காலத்திற்கெல்லாம் பொதுவாக நின்று நிலைத்திருக்கும் மருத்துவ முறைகளை மட்டும் கூறி விளக்கம் செய்தார். முன்பு உண்டது நல்லபடியாக அற்றுவிட்டதுசீரணித்தது-என்பதை அறிந்து உண்ணுபவனானால் அவன் உடம்புக்கு நோய் வருவது இல்லையென்று இரண்டாம் குறட்பா கூறுகின்றது. -