பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 உணவும் செயலும் மிகுந்தாலும் நோய் செய்யும் . முன்பு உண்டது அற்றபிறகே உண்ணுதல் வேண்டும் . அளவறிந்து உண்ண வேண்டும் . அதனால் நீண்ட நாள் உடம்பு இருக்கும் . நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும் . உணவுக்கு உணவு மாறுபாடில்லாத குண முள்ளதை உண்ண வேண்டும் . குறைந்த அளவு உண்ண வேண்டும் . அதிகம் உண்ணுவதால் நோய் வரும், எவ்வளவு சீர வணிக்க முடியுமோ அவ்வளவே உண்ண வேண்டும்-என்பனவெல்லாம் நமக்கு நாமே உடம்பைக் காத்துக்கொள்ளும் பொது முறைகளாகக் கூறப்பட்டன. இனி மருத்துவனாருக்கும்கூறுகின்றார். மருத்துவம் பார்ப்ப வர் எவைகளை முறையாகக் கண்டு கொள்ள வேண்டும் என்னும் உண்மைகளை எட்டு, ஒன்பது பாடல்கள் கூறு கின்றன. நோய் நாடுதல், நோய் முதல் நாடுதல், அது தணிக்கும் வாய் நாடுதல், அதற்கேற்ப செயல் படுதல், நோயுற்றான் அளவினை அறிதல், பிணியளவு அறிதல், காலம் அறிதல்-ஆன இவையனைத்தையும் மருத்துவன் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் என்று முறையே எட்டாம் பாடலும், ஒன்பதாம் பாடலும் கூறுகின்றன. மருந்து நான்கு வகைப்படும் என்று பத்தாம் குறட்பா கூறுகின்றது. நோயுற்றவன், அதனைத்தீர்க்கும் மருத்துவன் அவனுக்குக் கருவியாகிய மருந்து, மருந்தினைப் பிழை படாமல் செய்து கொடுப்பவன் என்று நான்கு வகைப்படும். வாய்ப்பச் செயல் என்று எட்டாம் பாடல் கூறுவதும், 'கற்றான் கருதிச் செயல் என்று ஒன்பதாம் பாடல் கூறுவ தும் மருத்துவன் காலத்திற்கேற்றபடி மருந்தினை அறிந்து கொடுக்க வேண்டும் என்றான். கற்றான்' என்றதால் அந்தந்தக் காலத்தில் கற்ற மருந்து முறைகளை என்றும் கூறுவதாகும், -