பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘歇3 110. குறிப்பு அறிதல் தலைமகன், தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ் இருவர் குறிப்பினையும் அறிதலுமாகும். தலைமகன் தலைமகள் உள்ளத்தில் ேதா ன் றி ய குறிப்பினை அவளுடைய நோக்கினால் அறிந்தான் என்று முதற்குறட்பா கூறுகின்றது. இரண்டாம் குறட்பாவும் அக்கருத்தினையே மேலும் விளக்கமாகக் கூறுகின்றது. கண்கள் களவு கொள்ளும் பார்வையின் இன்ப அளவு இரண்டாம் பாடலில் காணப்படுகிறது. அப்பெண்ணின் பால் காணப்பட்ட நோக்கும், நாணமும் அவனால் அறியப் பட்டதை மூன்றாம் பாடல் தெரிவிக்கின்றது. அவளுடைய நாணயத்தினாலும், மகிழ்ச்சியினாலும் அவன் அறிந்து கொண்டதை நான்காம் பாடல் குறிக்கின்றது. அவள் குறிக்கொண்டு நோக்கியதை ஐந்தாம் பாடல் விளக்குகின்றது. இப்பாடல் சிறக்கணித்தாள்’ என்று குறிப்பிட்டு உணர்த்துகின்றது. ஆறாம் பாடல் காதலன் தன்னுள்ளே சொல்லிக் கொள்ளுவதை உணர்த்துகிறது. கடுமையான சொற்கள் சொன்னாள் என்றாலும் அதன் உட்கருத்தினை அவன் புரிந்து கொண்டான் என்பதாகும். அதே கருத்தினை மேலும் விளக்கமாக ஏழாம் குறட்பா தெரிவிக்கின்றது. உறார் போன்று உற்றார்'என்று குறட்பா உணர்த்துகிறது. பசையினன. பைய நகும், என்று எட்டாம் பாடல் எடுத்துக் காட்டி, அக்காதலனைக் காதலி நோக்கி மகிழ்ந்ததைக் கூறுகின்றது. அக்குறிப்பு இனி பழுதாகாது என்று அவன் புரிந்துகொண்டான். பொது நோக்கு" என்பதனைப் பத்தாம் பாடல் குறிக் கின்றது. காதலர்களிடத்தில் இவ்வாறு காணப்படுதல் இயல்பு என்றும் அறிவுறுத்துகின்றது. இணைந்து நோக்கிய