பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தால் அவர் வரவு பார்த்துக் கொண்டே கண்கள் உறங்குவது இல்லை. வந்து விட்டால் திரும்பவும் போய் விடுவாரோ என்று எண்ணி உறங்குவது இல்லையாம். இதனை ஒன்பதாம் பாடல் விளக்குகிறது. அவளுடைய கண்களே பறை அறைவித்துத் தனது காம நோயினைப் பலரறியச் சொல்லு கின்றன என்று பத்தாம் பாடல் உணர்த்துகிறது. 119. பசப்புறு பருவரல் பசப்பு நிறம் அடைந்து துன்புறுவதனைக் கூறுவதாகும். பருவரல் என்பது துன்பம் என்று பொருள் படுவதாகும். பசப்பு என்பது பிரிவுத் துன்பத்தினால் வரும் நிற வேறுபாடு. தலைவனைக் காணாதபோது அவளிடத்தில் நிகழ்வதாகும். 'நயந்தவாக்கு நல்காமை நேர்ந்தேன்' என்று தொடங்கப் பெறுகின்ற முதற் குறட்பா, அவர் பிரிவுக்கு உடன்பட்டு இந்த நிலையினை அடைந்தேன் என்று அவள் கூறுவதைக் குறிக்கின்றது. மேனி மேல் ஊரும் பசப்பு' என்று இரண்டாம் பாடல் தொடங்குகிறது. பசப்பு நிறம் மிகவும் வேகமாக அவள் மேனி மீது படர்ந்து விட்டதாம். காம நோயினையும் பசலையும் அவர் கொடுத்துவிட்டுப் போனார் என்பதனைக் குறித்து, மூன்றாம் பாடல் நோயும் பசலையும் தந்து" என்று முடிகிறது. "சாயலும் நாணும்" அவர் கொண்டு போய் விட்டார் என்றும் கூறுகிறது. நான்காம் பாடல், கள்ளம் பிறவோ பசப்பு என்று கூறி கள்ளத்தனமாக இந்தப் பசப்பு வந்து விட்டது என்று அறிவிக்கின்றது.