பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முடிகிறது. நாணத்தினையும் அறியாமல் இருந்தேன் என்று கூறி, அது எப்போது என்பதனையும் ஏழாம் பாடல் நன்கு விளக்கம் செய்கின்றது. பெண்மை என்னும் நிறையாகிய குணத்தினை பல பொய்களைச் சொல்லும் கள்வனின் தாழ்ந்த சொற்கள் உடைக்கின்றனவென்று எட்டாம் பாடல் குறிக்கின்றது. இக் குறட்பாவில், மாயக் கள்வன்-பணிமொழிபெண்மை-படை, என்பன மிகுதியும் சிந்திக்கத்தக்கன வாகும். அவர் வந்தபோது கோபித்துக் கொள்ள முடியாமல் கலந்து விட்டதை ஒன்பதாம் பாடல் காட்டுகிறது. 'கலத்தல் உறுவது கண்டு' என்று குறட்பா முடிகிறது. பத்தாம் பாடலில் அவளால் புலந்து இருக்க முடியாது என்பதைக் காட்டும் கருத்து அமைந்துள்ளது. அவள் நெஞ்சுக்கு நெருப்பிலிட்ட நிணத்தினைகொழுப்பினை-உவமையாகக் கூறுகின்றாள். 'நிணம் .தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு என்று குறட்பா அழகான் கருத்தினை உணர வைக்கின்றது. 1 27. அவர்வயின்விதும்பல் பிரிந்திருக்கின்ற தலைவனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரையொருவர் காணுவதற்கு விரைத லாகும். இருவருக்கும் பொதுவான அதிகாரமாகும். விருப்பத்தால் விரைதலை விதும்பல் என்பதாம். தலைமகள் விரும்புவதை முதற்குறட்பா குறிக்கின்றது. அவள் கண்கள் நிலையும், விரல் தேய்ந்ததையும் கூறுகின் றாள். நாள் ஒற்றித் தேய்ந்த விரல்' என்று முடிகின்ற .குறட்பா சிந்தனைக்குரியதாகும். கண்களும் ஒளி இழந்து விட்டன. - இர்ண்டாம் குறட்பா நாயகியின் மனோநிலையினை உண்ர்த்துகிறது. நாயகரை மறந்தால் அழகு இழந்து